இவையிரண்டும் புகாருக்கு உள்நுழைகையில் தெரியும் பல்லனீச்சுரம் கோயிலுக்குப் பின்னுள்ளன. பல்லவனீச்சுரம் கோயிலுக்கு முன்னால் இற்றைக்கால நகரத்தார் சத்திரமும், அதற்கு அடுத்தாற்போல் சிலப்பதிகாரம், மணிமேகலையிற் குறிப்பிடும் புத்தர் பாதமுள்ள கோயிலும் (அகழாய்வுகளுக்கு அப்புறம் உள்ள நிலையிலுள்ளது) உள்ளன. புத்தர் கோயிலை நிருவகிக்கும் தமிழகத் தொல்லாய்வுத் துறை இவற்றை ஏன் கண்டுகொள்ள மாட்டேம் என்கிறதென்று புரியவில்லை. வியப்புத்தான்.
பார்க்க விரும்புகிறவர்கள் பல்லவனீச்சுரம், புத்தர் கோயில் இடிபாடுகள், சம்பாதி அம்மன் கோயில் இடிபாடுகள், சதுக்க பூதம் ஆகியவற்றை ஒருங்கே சேர்ந்து பார்க்கலாம். வரலாற்றில் ஆர்வமுள்ளோர் பார்க்கவேண்டிய இடம்.
அன்புடன்,
இராம.கி.
Comments
Post a Comment